இந்தியா

தில்லியிலிருந்து ஹாங்காங் சென்ற 14 பேருக்கு கரோனா

21st Aug 2020 03:50 PM

ADVERTISEMENT

தில்லியிலிருந்து ஹாங்காங் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் தில்லியிலிருந்து வரும் விமானங்கள் ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்க தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று 14 பயணிகளுடன் ஹாங்காங் சென்றது. ஹாங்காங் சென்றதும் பயணிகள் அனைவருக்கு விமானநிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதலில் 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் 3 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.

ஹாங்காங் வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் பயணத்திற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா 'நெகடிவ்' சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும் என விதிமுறைகளை வகுத்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே தற்போது 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தில்லியிலிருந்து வரும் விமானங்கள் ஹாங்காங்கில் தரையிரங்க ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா தவிர்த்து இந்தோனேஷியா, வங்கதேசம், கஜகஸ்தான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் கரோனா 'நெகடிவ்' சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT