இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனாவிலிருந்து மீண்ட 107 வயது மூதாட்டி

21st Aug 2020 11:44 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் 107 வயது மூதாட்டி மற்றும் அவரது 78 வயது மகள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

ஜல்னா நகரில் உள்ள கோவிட் மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

மேலும், மூதாட்டியின் மகள், 65 வயது மகன் மற்றும் 27, 17 வயதுடைய பேரக்குழந்தைகள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், 107 வயது மூதாட்டிக்கு சமீபத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.  

மூதாட்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வயதில் அவர் குணமடைந்தது மருத்துவர்களுக்கு பெரும் சவலாக இருந்தது. மூதாட்டி உள்பட மூன்று பேர் தற்போது குணமடைந்து, மருத்துவமனையில் வீடு திரும்பியுள்ளனர். 

இதுகுறித்து மூதாட்டியின் மகன் கூறுகையில், 

நாங்கள் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். மருத்துவ ஊழியர்கள் காட்டிய அன்பும், அரவணைப்பாலும் இன்று நாங்கள் உயிர் பிழைத்தோம் என்றார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT