இந்தியா

ஒடிசாவில் புதிதாக 2,698 பேருக்குத் தொற்று: மேலும் 10 பேர் பலி

21st Aug 2020 12:52 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,698 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 10 பேர் பலியாகியுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாக பலியான 10 பேரில், கஞ்சம் (4), புவனேஷ்வர் (2), அங்குல், கோராபுட், நாயகர் மற்றும் சோனேபூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். 

ADVERTISEMENT

நேற்று ஒரேநாளில் 56,479 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் இதுவரை 11,72,426 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஒரேநாளில் 1,641 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து இதுவரை 48,576 பேர் குணமடைந்துள்ளனர். ஒடிசாவில் மொத்த பாதிப்பு 72,718 ஆக உயர்ந்துள்ளது. அதில், 23,699 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தொற்று காரணமாக 390 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT