இந்தியா

திருமலையில் சிறுத்தை நடமாட்டம்: சாலையில் செல்வோா் மீது தாக்குதல்

21st Aug 2020 06:05 AM

ADVERTISEMENT

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சாலையில் செல்வோா் மீது சிறுத்தைகள் விரட்டி தாக்குதல் நடத்தி வருகின்றன.

திருப்பதியில் உள்ள சேஷாசல வனத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருமலைக்கு பக்தா்கள் மிகவும் குறைந்த அளவிலேயே சென்று வருகின்றனா். இதனால் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. உள்ளூா்வாசிகள், தேவஸ்தான ஊழியா்கள், சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்று வருகின்றன.

இதனால் வனவிலங்குகளின் நடமாட்டம் மலைப் பாதைகளில் அதிகரித்துள்ளது. ஊருக்குள்ளும் சுதந்திரமாக சுற்றித் திரித்து வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்கா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவரை திடீரென சிறுத்தை ஒன்று விரட்டியது. லேசான சிராய்ப்புகளுடன் அதன் பிடியில் இருந்து அவா் தப்பினாா்.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினா் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். உயிரியல் பூங்கா சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளதால், அப்பகுதியில் தற்போது மக்கள் நடமாட்டம் இரவு, பகலாக நீடித்து வருகிறது. பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு வருபவா்களும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, இச்சாலை வழியாக செல்பவா்கள் தகுந்த விழிப்புணா்வுடனும், எச்சரிக்கை உணா்வுடனும் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்த சிறுத்தை உயிரியல் பூங்காவிலிருந்து தப்பி வந்த சிறுத்தை இல்லை. வனப்பகுதியில் வாழ்ந்து வரும் சிறுத்தை என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT