இந்தியா

தேசியக் கொடியைக் கிழித்த இளைஞர் கைது

20th Aug 2020 11:28 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் புதன்கிழமை அன்று தேசியக் கொடியைக் கிழித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், மேற்குவங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் புதன்கிழமை சஞ்சால் பிஸ்வாஸ் என்ற இளைஞர் தேசியக் கொடியை கிழித்து அவமதித்துள்ளார்.

சஞ்சல் தேசியக் கொடியைக் கிழித்ததை அப்பகுதியினர் காணொளி பதிவு செய்து காவல் துறைக்கு அனுப்பினர்.

இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்ததில் மதுபோதையில் இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது என கூறினார்கள். 

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT