இந்தியா

கரோனா: மேற்குவங்கத்தில் 2,300 கட்டுப்பாட்டு மண்டலங்கள்

20th Aug 2020 03:31 PM

ADVERTISEMENT

கொல்கத்தா: கரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மேற்குவங்கத்தில் அதிக அளவாக 2,300 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மேற்குவங்கத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 2,304 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவை ஒப்பிடும்போது கரோனா பரவல் விகிதம் மேற்குவங்கத்தில் குறைவாகவே காணப்பட்டாலும், கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதில் நடியா மாவட்டத்தில் அதிக அளவிலான கட்டுப்பட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து கிழக்கு புர்டான், வடக்கு தினஜ்பூர் பகுதிகளில் அதிக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நடியா மாவட்டத்தில் 764 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 396 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக்கப்பட்டுள்ளன. 

இதேபோன்று புர்டானில் 55 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 350 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தினஜ்பூரில் 334 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 212 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குவங்கத்தில் 1,25,922 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 95,000 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT