மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் குறையாத நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய ஜல்சக்தி துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அறிகுறிகள் இருந்தததால் நான் கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
ADVERTISEMENT