இந்தியா

இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: கே. சிவன்

20th Aug 2020 05:07 PM

ADVERTISEMENT


இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனியார்மயமாக்கப்படாது என அதன் தலைவர் கே. சிவன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

விண்வெளித் துறையில் இந்தியாவின் திறன்களை வெளிக்கொண்டு வருவது பற்றிய இணையவழி கலந்துரையாடலில் கே.சிவன் பங்கேற்றார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

"விண்வெளித் துறையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள், நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இஸ்ரோவை தனியார்மயமாக்கப்படும் என்ற தவறான புரிதல்கள் உள்ளன. இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது. சொல்லப்போனால் சீர்திருத்தங்களின் முழு செயல்பாடும், தனிநபர்கள் விண்வெளித் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே உதவுகிறது. இல்லையெனில், அவை இஸ்ரோவால் மேற்கொள்ளப்படும்." என்றார் சிவன்.

ADVERTISEMENT

Tags : ISRO
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT