இந்தியா

பிரணாப் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: ராணுவ மருத்துவமனை

20th Aug 2020 12:44 PM

ADVERTISEMENT

 

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் அவா் கோமா நிலையில் உள்ளார். மேலும் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து நேற்று புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் உள்ளதாகவும், ஆனால் அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ நிபுணர்களால் கண்காணித்துவருவதாகவும் ராணுவ மருத்துவனை இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Tags : Pranab
ADVERTISEMENT
ADVERTISEMENT