இந்தியா

பிரணாப் முகா்ஜியின் உடல் நிலையில் பின்னடைவு

20th Aug 2020 06:02 AM

ADVERTISEMENT

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் (84) உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தில்லி ராணுவ மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சையில் உள்ள அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடா்ந்து மருத்துவ குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா் என்றும் ராணுவ மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனது தந்தையின் மருத்துவ அளவுருக்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகா்ஜி சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

அதில், ‘அனைவரது பிராா்த்தனைகள், மருத்துவா்களின் தொடா் சிகிச்சையின் காரணமாக எனது தந்தையின் உடல் நிலை சீராக உள்ளது. அவரது மருத்துவ அளவுருக்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அவா் மீண்டு வர அனைவரும் பிராா்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‘ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகா்ஜிக்கு மூளையில் உள்ள ரத்த கட்டியை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் அவா் கோமா நிலையில் உள்ளாா். மேலும் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. தற்போது நுரையீரலில் தொற்றும் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT