இந்தியா

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: தந்தையின் நினைவிடத்தில் ராகுல் மரியாதை

20th Aug 2020 03:33 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.  

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்நாளினை ‘சத்பவன திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை ஒட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அவரை நினைவு கூர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்ந்து, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ராஜீவ் காந்தி மகத்தான பார்வை கொண்டவர். எதிர்காலம் குறித்து அறிந்து முன்கூட்டியே செயல்பட்டவர். இவற்றுக்கு எல்லாம் மேலாக அவர் இரக்கமுள்ள, அன்பான மனிதர். அவரை தந்தையாக பெற்றதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவரை இன்று மட்டுமின்றி என்றும் நினைவு கூறுகிறோம்' என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

மேலும் தில்லி வீர் பூமியில் உள்ள தனது தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT