இந்தியா

குப்வாரா என்கவுண்டரில் பலியான தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: காவல்துறை

20th Aug 2020 12:11 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் விஜய்குமார் கூறியதாவது, 

குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில், டேனிஷ் என்ற பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனை என்று அவர் தெரிவித்தார். 

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான எல்.ஈ.டி தளபதி நசீர்யுதின் லோன், கடந்த ஏப்ரல் 18 அன்று சோபோரில் மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்களையும், இந்தாண்டு மே 4ஆம் தேதி ஹண்ட்வாராவில் மேலும் மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்களைக் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹண்ட்வாராவின் கணிபோரா கிரால்குண்ட் பகுதியில் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT