இந்தியா

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 73.91% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

20th Aug 2020 05:14 PM

ADVERTISEMENT


நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 73.91 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 20,96,664 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்று அதிகபட்சமாக 58,794 பேர்  குணமடைந்தனர். இதையடுத்து கரோனா மீட்பு விகிதம் 73.91 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று, கரோனாவால் பலியானோர் விகிதம் 1.90 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது 2.62 சதவிகிதம் பேர் மட்டுமே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,86,395 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 14,10,269 அதிகமாக உள்ளது. 

ADVERTISEMENT

இந்தியா கரோனா பாதிப்பு நிலவரம்:

பாதிப்பு:  28,36,926
பலி:  53,866
குணமடைந்தோர்: 20,96,665
சிகிச்சை பெற்று வருவோா்:  6,86,395

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT