இந்தியா

தில்லியில் 29% பேரின் உடலில் கரோனா எதிர்ப்புத் திறன்: சுகாதாரத் துறை

20th Aug 2020 04:16 PM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லியில் வாழும் பொதுமக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 29.1% பேரின் உடலில் கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருந்தது தெரிய வந்திருப்பதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய சத்யேந்தர் ஜெயின், 11 மாவட்டங்களில் இருந்து ஆகஸ்ட் 1 - 7ஆம் தேதிக்குள்பட்ட காலக்கட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதாகவும், அடுத்த ஆய்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
 

Tags : new delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT