தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,398 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,189-ஆக உயா்ந்துளளது.
தலைநகரில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 போ் கரோனாவால் உயிரிழந்ததாகவும், இதையடுத்து, மொத்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,235-ஆக உயா்ந்ததாகவும் அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் தற்போது கரோனா நோயாளிகள் 11,137 போ் சிகிச்சையில் உள்ளனா். இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 11,068 ஆக இருந்தது.
அன்றைய தினம் புதிதாக 1,374 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும், 12 போ் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 23-ஆம் தேதி தில்லியில் ஒரே நாளில் அதிக அளவாக 3,947 போ் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதன்பிறகு நோய் பாதிப்பு அந்த அதிகபட்ச அளவை எட்டவில்லை.