இந்தியா

தனியார் குத்தகையில் திருவனந்தபுரம் விமான நிலையம்: எதிர்க்கும் கேரள முதல்வர்

20th Aug 2020 01:02 PM

ADVERTISEMENT

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவிற்கு மாநில அரசு ஒத்துழைக்காது என கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு விமான நிலையங்களை குறிப்பிட்ட கால அளவில் தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட புதன்கிழமை மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்தது.

இந்த முடிவிற்கு கேரளத்தின் ஆளும் இடதுமுன்னணி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன் மத்திய அமைச்சரவை முடிவானது புதுதில்லியில் பிரதமருடன் தனிப்பட்ட சந்திப்பின் போது பிரதமரால் அளிக்கப்பட்ட உத்தரவாதத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசு முன்வைத்த கோரிக்கைகளுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளது. இந்த முடிவிற்கு இடதுமுன்னணி அரசு ஒத்துழைப்பு கொடுக்காது. மாநில அரசின் விருப்பத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, “கேளர மாநில அரசு கொச்சி மற்றும் கண்ணூரில் உள்ள விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து, மக்களுக்கு நல்ல விதமான அனுபவங்களை கொடுத்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் திருவனந்தபுர விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து விவாதிப்பதற்காக வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT