ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் (பிஜேடி) எம்.எல்.ஏ.-வுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை 8 எம்.எல்.ஏ.க்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
புவனேஸ்வர் எம்.எல்.ஏ அனந்த நாராயண் ஜீனா லேசான அறிகுறிகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில்,
கரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்தேன். அதில் தொற்று உறுதியானது. தற்போது நன்றாக இருக்கிறேன். வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சோதனையை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஒடிசா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (ஓடிடிசி) தலைவர் மற்றும் பிஜேடி பொதுச் செயலாளர் ஸ்ரீமெய் மிஸ்ரா மற்றும் ஒடிசா சிறு தொழில்கள் கழகத்தின் தலைவர் சின்மாய் குமார் சாஹூ ஆகியோர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.