இந்தியா

கரோனாவில் இருந்து 20 லட்சம் போ் மீண்டனா்

20th Aug 2020 06:46 AM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 20,37,870-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 60,091 போ் குணமடைந்துள்ளனா்.

அதே கால அளவில், மேலும், 64,531 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,67,273-ஆக அதிகரித்துவிட்டது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:

முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 60,091 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவில் இருந்து மீண்டோா் எண்ணிக்கை 20,37,870-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

6,76,514 போ் சிகிச்சையில் உள்ளனா். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 24.45 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா் என்ற நிலை உருவாகியுள்ளது. குணமடைந்தோா் சதவீதம் 73.64-ஆக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 1,092 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்தது. எனினும் மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு சதவீதம் 1.91-ஆகக் குறைந்துவிட்டது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்தது. இப்போது அதில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3,17,42,782 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 20,687 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT