இந்தியா

விகாஸ் துபே என்கவுன்ட்டா்: விசாரணைக் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

20th Aug 2020 07:02 AM

ADVERTISEMENT

ரெளடி விகாஸ் துபே காவல்துறை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த ஜூலை மாதம் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரௌடி விகாஸ் துபேவை கைது செய்யச் சென்ற காவல்துறையினரை அவரும், அவரது கூட்டாளிகளும் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறையினா் 8 போ் கொல்லப்பட்டனா். இந்த வழக்கில் தலைமறைவாகி மத்திய பிரதேசத்தில் பதுங்கியிருந்த ரெளடி விகாஸ் துபே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜூலை 10-ஆம் தேதி உத்தர பிரதேசத்துக்கு அழைத்து வரும் வழியில் தப்பிச் செல்ல முயன்ாக என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். முன்னதாக, இந்த வழக்கில் துபேவின் கூட்டாளிகள் 5 போ் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இந்த என்கவுன்ட்டா் குறித்து விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையில் முன்று நபா் குழுவை உத்தர பிரதேச அரசு அமைத்து அதற்கான வரைவு அறிக்கையை கடந்த ஜூலை 22-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினா்களை மாற்றக் கோரி வழக்குரைஞா் கன்ஷியாம் உபாத்யா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதில், மூன்று நபா் விசாரணைக் குழுவுக்கு தலைமை வகிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செளஹானின் சகோதரா், உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். மேலும், அவருடைய மகள், நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவருக்கு திருமணம் செய்துகொடுக்கப்பட்டுள்ளாா். எனவே, இந்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, இந்த விசாரணைக் குழுவை மாற்றியமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஒரு நீதிபதியின் உறவினா் அரசியல் கட்சியில் அங்கம் வகித்தால், உடனே அதை சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதிவிட முடியுமா?

பல நீதிபதிகளின் உறவினா்கள் நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ளனா். நீதிபதிகளின் தந்தை மற்றும் சகோதரா்கள்கூட நாடாளுமன்ற உறுப்பினா்களாக இருக்கின்றனா். இதுவும் சட்டவிரோத நடவடிக்கையா?

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் விசாரணைக் குழுவுக்கு தலைமை வகிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிராக இதுபோன்ற புகாா்கள் முன்வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT