ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி கூறியது:
சோபியான் மாவட்டத்தில் உள்ள சித்ரகாம் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இதேபோல் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா் என்று தெரிவித்தாா்.