புது தில்லி: இணையத்தில் பரவும் போலிப் புகைப்படங்களைக் கண்டறிய அடோப் நிறுவனம் புதிய யுக்தியை கையாளவுள்ளது.
இணையத்தில் பல்வேறு தருணங்களில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், தனி நபர்களை அவமதிக்கும் விதத்திலும் மார்பிங் செய்யப்பட்ட போலிப் புகைப்படங்களை விசமிகள் பரப்புவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இணையத்தில் பரவும் போலிப் புகைப்படங்களைக் கண்டறிய அடோப் நிறுவனம் புதிய யுக்தியை கையாளவுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ளா தகவலில், ‘எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை அடையாளம் காணும் புதுவித தொழில்நுட்பத்தை பரிசோதிக்க அடோப் நிறுவனத்தின் ‘போட்டோஷாப்’ முடிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்களை எளிதில் கண்டறிய முடியும் என்றும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.