இந்தியா

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: ராணுவ மருத்துவமனை

DIN

மூளையில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜி கோமா நிலையில் இருப்பதாக தில்லி ராணுவ மருத்துவமனை நேற்று தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை தொடா்ந்து சீராகவே உள்ளது. அதில் எந்தவொரு ஏற்ற இறக்கமும் காணப்படவில்லை. அவா் தொடா்ந்து செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளாா் என்று கூறப்பட்டிருந்தது.

பிரணாப் முகா்ஜி கடந்த 10-ஆம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடா்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக, அறுவைச் சிகிச்சைக்கு முன்பான பரிசோதனையின்போது பிரணாப் முகா்ஜிக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT