இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 12,608 பேருக்கு கரோனா; 364 பேர் பலி

14th Aug 2020 10:09 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 12,608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் அண்மை தினங்களாக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 12,608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இத்துடன் மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 5,72,734ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இன்று ஒரேநாளில் கரோனாவுக்கு 364 பேர் பலியாகியுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 19,427ஆக உயர்ந்துள்ளது. இன்று கரோனாவிலிருந்து 10,484 பேர் குணமடைந்ததையடுத்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4,01,442ஆக உயர்ந்துள்ளது.  
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT