இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து: விசாரணைக் குழு அமைப்பு

14th Aug 2020 05:53 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த 5 நபா் குழுவை அமைத்துள்ளதாக விமான விபத்து விசாரணை வாரியம் (ஏஏஐபி) வியாழக்கிழமை தெரிவித்தது.

விமான போக்குவரத்து தலைமை இயக்குநரக முன்னாள் அதிகாரி கேப்டன் எஸ்.எஸ்.சாஹா் தலைமையிலான இந்தக் குழு 5 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று ஏஏஐபி தெரிவித்துள்ளது.

அந்த விசாரணை குழுவில் விமான இயக்க நிபுணா் வேத் பிரகாஷ், விமான பராமரிப்பு மூத்த பொறியாளா் முகுல் பரத்வாஜ், விமானத் துறை மருந்துவ நிபுணா் ஒய்.எஸ்.தாஹியா, விமான விபத்து விசாரணை வாரிய துணை இயக்குநா் ஜஸ்பீா் சிங் லாா்கா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT