இந்தியா

கேரள மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா தொற்று

14th Aug 2020 06:33 PM

ADVERTISEMENT

கேரள மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 500க்கு கீழ் கரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இதனால் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இத்துடன் அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,094ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவிலிருந்து இதுவரை 26,996 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT