இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

14th Aug 2020 09:00 PM

ADVERTISEMENT

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்நாயகர், சரித்குமாரின் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் வாயிலாக சுமாா் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் பணியாளரும் கேரள முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடா்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தக் கடத்தல் விவகாரத்தில் அரசு அதிகாரி சந்தீப் நாயா், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் பணியாளா் பி.எஸ்.சரித் ஆகியோருக்கும் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் என்ஐஏ பதிவு செய்த முதல் தகவலறிக்கை அடிப்படையில் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா், பி.எஸ்.சரித் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனா். இந்தச் சூழலில், அவா்கள் மூவரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜா்படுத்தினா். அப்போது மூவரின் காவலை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் ஸ்வப்னாவிடம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையே விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT