இந்தியா

தில்லியில் புதிதாக 1,192 பேருக்கு கரோனா: மேலும் 11 பேர் பலி

14th Aug 2020 05:01 PM

ADVERTISEMENT

புதுதில்லி: தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,192 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,192 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,50,652-ஆக அதிகரித்துள்ளது. இன்று (வெள்ளிக் கிழமை) 790 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,35,108-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 3,372 பேரும், கரோனா கண்காணிப்பு மையத்தில் 726 பேரும், வீடுகளில் 5,882 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக 11 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,178-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT