இந்தியா

கரோனா தடுப்புப் பணியில் சரியான பாதையில் செல்கிறோம்: பிரதமர் மோடி

11th Aug 2020 01:50 PM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா தொற்று பாதித்தவர்களில் பலி விகிதம் குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது கரோனா தடுப்புப் பணியில் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதையே காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, நாட்டில் 80 சதவிகித கரோனா தொற்று பாதிப்பு 10 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. 

இறப்பு குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது நாம் கரோனா தடுப்பில் சரியான பாதையில் செல்வதையே காட்டுகிறது.

ADVERTISEMENT

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT