இந்தியா

ஒடிசாவில் புதிதாக 1,341 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

11th Aug 2020 12:21 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் புதிதாக 1,341 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 48,796 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மேலும், ஒரே நாளில் பத்து பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 296 ஆக உள்ளது. 

புதியதாக 29 மாவட்டங்களிலிருந்து தொற்று பதிவாகியுள்ளன. அதில், 818 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், 523 பேர் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டன. 

ADVERTISEMENT

தற்போது ஒடிசா மாநிலத்தில் 15,426 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும் 33,021 பேர் நோயிலிருந்தும் மீண்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில் திங்களன்று மட்டும் 23,035 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT