இந்தியா

கரோனாவை வென்ற முதியவர் மனைவியை இழந்த சோகம்

11th Aug 2020 03:58 PM

ADVERTISEMENT

ஒடிசா மாநிலத்தில் 80 வயது முதியவர் கரோனா தொற்று பாதித்து குணமடைந்த நிலையில், கரோனா தொற்றுக்கு அவரது மனைவி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ஹாம்புர் மாவட்டம் கொலந்தரா கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயதாகும் ஆதி நாராயண் ஜெனா. கரோனா தொற்றுக்குள்ளாகி சுமார் 10 நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த ஆதி நாராயண் ஜெனாவின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவரது 74 வயது மனைவி குண்டலா அதே கரோனா தொற்றுக்கு பலியாகிவிட்டார்.

ஜூலை 29-ம் தேதி உடல் நலன் பாதிக்கப்பட்ட குண்டலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், குடும்பத்தாருக்கு சோதனை செய்யப்பட்டது. பிள்ளைகள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லாத நிலையில், கணவர் ஜெனாவுக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஆகஸ்ட் 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிறன்று குண்டலா மருத்துவமனையில் உயிரிழக்க, ஜெனா, கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

கரோனாவை வென்ற ஜெனாவை, அவரது வாழ்க்கையைத் துணையை இழந்த சோகத்தில் இருந்து மெல்ல மீட்க பிள்ளைகள் முயற்சித்து வருகிறார்கள்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT