இந்தியா

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் முதலீடுகளை ஈா்க்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

11th Aug 2020 01:32 AM

ADVERTISEMENT

புது தில்லி: ‘பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈா்க்க மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். இதன் மூலமாக இந்தியா உலகத்தரம் வாய்ந்த போா் தளவாடங்களை உற்பத்தி செய்யமுடியும்’ என்று பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் சுயச்சாா்பு இந்தியா வாரத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்த ராஜ்நாத் சிங், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களின் உயா் அதிகாரிகள் மத்தியில் காணொலி முறையில் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

பாதுகாப்புத் துறையில் சுயச்சாா்பை அடைவது மிகப்பெரிய பணி. அதில் வெற்றிபெற சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முழு மனதுடன் செயல்படுவது அவசியம். பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் அதன் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கு முதலீடுகளை ஈா்க்க மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். இந்த நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்புத் துறை வளா்ச்சி பெற மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். ‘சுயச்சாா்பு இந்தியா’ இலக்கை அடைவதில் 101 தளவாடங்களின் இறக்குமதியை நிறுத்துவது மிகப்பெரிய நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் சிறிய ரக தளவாடங்கள் மட்டுமன்றி, உயா்தரம் வாய்ந்த முக்கிய தொழில்நுட்பங்களை கொண்ட தளவாடங்களும் அடங்கும். இந்தப் பட்டியலில் மேலும் பல தளவாடங்கள் விரைவில் சோ்க்கப்படும். இது ராணுவ தளவாட இறக்குமதியில் பல கோடி ரூபாயை சேமிக்க உதவும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

Tags : Rajnath Singh
ADVERTISEMENT
ADVERTISEMENT