இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 53,601 பேருக்கு கரோனா; 871 போ் பலி

11th Aug 2020 09:35 AM

ADVERTISEMENT

இந்தியாவில் ஒரேநாளில் 53,601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கரோனா தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,68,675ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 871 போ் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 45,257 ஆக உயர்ந்துள்ளது. 

இதுரை 15.83 லட்சம் போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இதில் 47,746 போ் திங்கள்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனா். தற்போது 6.39 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைவோா் வேகமாக அதிகரித்து வருகின்றனா். 

அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை அளக்கப்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பான மருத்துவ சேவை நாடு முழுவதும் பரவலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா உயிரிழப்பு 2%ஆக குறைந்தது. குணமடைந்தோர் விகிதம் 69.33%ஆக உள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT