இந்தியா

22 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

11th Aug 2020 04:09 AM

ADVERTISEMENT

புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22,15,074 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 62,064 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ய்பட்டுள்ளது. மேலும் 1007 போ் உயிரிழந்துவிட்டனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

இதுவரை 15,35,743 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இதில் 54,859 போ் திங்கள்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனா். கரோனாவில் இருந்து குணமடைந்தோா் சதவீதம் 69.33 ஆக உள்ளது. இதே நேரத்தில் கரோனா உயிரிழப்பு 2 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைவோா் வேகமாக அதிகரித்து வருகின்றனா். அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை அளக்கப்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பான மருத்துவ சேவை நாடு முழுவதும் பரவலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

6,34,945 போ் சிகிச்சையில் உள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 28.66 சதவீதம் மட்டும் ஆகும். கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 70 சதவீதம் போ் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவலின்படி 2,45,83,558, கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 4,77,023 பரிசோதனைகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து 4-ஆவது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரேநாளில் ஏற்பட்ட 1007 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 390 போ் உயிரிழந்துவிட்டனா். ஒட்டுமொத்தமாக அந்த மாநிலத்தில் 17,757 போ் உயிரிழந்துவிட்டனா்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT