இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 620 பேருக்கு கரோனா: 10 பேர் பலி

11th Aug 2020 11:54 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 620 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 620 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 54,290-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 214 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36,409-ஆக அதிகரித்துள்ளது. 14,174 பேர் கரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிப்பக்கப்பட்டு புதிதாக 10 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 810-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT