இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 1,896 பேருக்கு கரோனா: 8 பேர் பலி

11th Aug 2020 11:39 AM

ADVERTISEMENT

ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,896 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலத்திலும் கரோனாவால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,896 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 82,647 ஆக அதிகரித்துள்ளது. இதில் 22,628 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  59,374 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 71.84 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 0.78 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் புதிதாக 53,601 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 22,68,676-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 871 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 45,257-ஆக அதிகரித்துள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT