இந்தியா

ராஜஸ்தானில் “ஜெய் ஸ்ரீ ராம்” கூறக்கோரி இஸ்லாமியரைத் தாக்கிய இருவர் கைது

9th Aug 2020 01:06 PM

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறக்கோரி இஸ்லாமியர்களை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் 52 வயதான கப்பர் அஹ்மத் கச்சா ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருகிறார்.கடந்த வெள்ளிகிழமையன்று அவரிடம் அடையாளம் தெரியாத இருவர் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்றும் மோடி ஜிந்தாபாத் என்றும் கூறக்கோரி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனை மறுத்த கச்சாவை அவர்கள் பலமாகத் தாக்கி அவரிடம் இருந்த பணத்தையும் திருடியதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக காவல்துறையிடம் கச்சா புகாரளித்த பின் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.தாக்குதலால் கச்சாவின் பற்கள் உடைந்தன. மேலும் கண் வீங்கியும், கன்னத்தில் காயங்களும் காணப்பட்டன.

இது குறித்துப் பேசிய "வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், என் மாமா பயணிகளை அருகிலுள்ள கிராமத்திற்கு இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, ஒரு காரில் இருந்த இரண்டு பேர் அவரைத் தடுத்து புகையிலை கேட்டார்கள். இருப்பினும், அவர்கள் என் மாமா வழங்கிய புகையிலை வாங்க மறுத்து, மோடி ஜிந்தாபாத் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கூறும்படி கட்டாயப்படுத்தினார்கள். ”என்று கச்சாவாவின் மருமகன் ஷாஹித் கூறினார்.

ADVERTISEMENT

Tags : Rajasthan
ADVERTISEMENT
ADVERTISEMENT