ஆந்திரம்: ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள சென்றுள்ள உதீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள ஹோட்டலில் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளதாகவும், 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விஜயவாடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை.