இந்தியா

கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் 2 பேருக்கு கரோனா: அரசு அலுவலகம் மூடல்

9th Aug 2020 04:20 PM

ADVERTISEMENT

தர்வாட்: கர்நாடகத்தில் உள்ள தர்வாட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகத்தில் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள தர்வாட் பகுதியில் செயல்பட்டு வரும் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு அரசு அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த அலுவலகத்தை தனிமைப்படுத்தி, ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் அடுத்த இரண்டு தினங்களுக்கு அரசு அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற உள்ளது. 

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, 79,773 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 89,238 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3091-ஆக உள்ளது.

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT