இந்தியா

மகாராஷ்டிரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

9th Aug 2020 04:59 PM

ADVERTISEMENT

மும்பை: மகாராஷ்டிரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் மீண்டும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வங்கக்கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மேற்கு கடலோர பகுதிகளிலும், மத்திய மகாராஷ்டிரத்திலும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மழை பெய்ய வாயுப்பு உள்ளது. விதர்பா பகுதியில் நாளை (திங்கள் கிழமை) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.  மும்பை மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் 50 முதல் 60 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Rain
ADVERTISEMENT
ADVERTISEMENT