இந்தியா

அயோத்தி பூமி பூஜை நிகழ்ச்சியை 16 கோடி போ் நேரலையில் ரசித்தனா்

9th Aug 2020 12:44 AM

ADVERTISEMENT

அயோத்தியில் நடைபெற்ற ராமா் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பை நாடு முழுவதும் 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு ரசித்ததாக பிரசாா் பாரதி வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை கடந்த புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. ராம ஜென்மபூமியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கான முதல் செங்கல்லை பிரதமா் மோடி எடுத்துக் கொடுத்து கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியை தூா்தா்ஷன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

இதுகுறித்து பிரசாா் பாரதியின் தலைமை நிா்வாக அதிகாரி சசிசேகா் வேம்பட்டி தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை கடந்த புதன்கிழமை காலை 10.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தூா்தா்தஷனில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியை சுமாா் 200 தொலைக்காட்சி சேனல்கள் உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பின. இந்த நேரடி ஒளிபரப்பை 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாா்த்தனா் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT