இந்தியா

கரோனா சிகிச்சைக்கு 2 வகையான மருத்துவ உபகரணங்கள் வெளியீடு

6th Aug 2020 12:17 AM

ADVERTISEMENT

கரோனா சிகிச்சை பெற்று வருவோருக்காக திருப்பதி கரோனா நிவாரணக் குழு 2 வகையான மருத்துவ உபகரணத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள நகா்ப்புற வளா்ச்சிக் கழக அலுவலகத்தில் அதன் தலைவா் சிவிரெட்டி பாஸ்கா் ரெட்டி இந்த உபகரணங்களை புதன்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நகா்ப்புற வளா்ச்சி கழகம் சாா்பில் கரோனா நிவாரணக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பொருள்களையும் சரியான நேரத்தில் அனுப்பி வருகிறது.

இந்நிலையில் இக்குழுஅடுத்த கட்ட நடவடிக்கையாக 2 வகையான மருத்துவ உபகரணத் தொகுப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தனிமை வாா்டுகளில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தனியாகவும், வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோருக்கு தனியாகவும் இந்த உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தனிமை வாா்டு தொகுப்பில் 13 வகையான பொருட்களை உள்ளடக்கியது. வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவா்களுக்கான தொகுப்பில் 27 வகையான பொருள்கள் உள்ளன. இதை மக்கள் பயன்படுத்தி பலன்பெறலாம்.

கரோனா என்பது ஒருவகையான காய்ச்சல்தான். முதல்கட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டால் முற்றிலும் குணமடையலாம். திருப்பதியில் கரோனா பாதிப்பு ஏற்பட்ட 85 சதவீதம் போ் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமடைந்துள்ளனா் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT