இந்தியா

உலக அரங்கில் இந்தியாவின் தெளிவான குரல்: சுஷ்மாவை நினைவு கூர்ந்த மோடி

6th Aug 2020 04:17 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: உலக அரங்கில் இந்தியாவின் தெளிவான குரல் என்று மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மாவை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது, அதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:

சுஷ்மா அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரை எண்ணிப் பார்க்கிறேன். அவரது எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் சுயநலமில்லாமல் இந்தியாவுக்காக பணியாற்றியதோடு, உலக அரங்கில் இந்தியாவின் தெளிவான குரலாகவும் இருந்துள்ளார். அவரது நினைவாக நான் பேசியதைப் பாருங்கள்.

ADVERTISEMENT

இவ்வாறு பதிவிட்டுள்ள மோடி சுஷ்மா மரணத்திற்குப் பிறகு நடந்த நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் தான் பேசிய பழைய விடியோ ஒன்றையும் ட்வீட்டில் பகிர்ந்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT