இந்தியா

ஆந்திரத்தில் வேளாண் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்

6th Aug 2020 12:54 PM

ADVERTISEMENT

 

ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் மாவட்டத்தில் உள்ள வேளாண் தொழிற்சாலையில் கொதிகலனின் குழாய் வெடித்ததில் தொழிலாளி  ஒருவர் உயிரிழந்தார். 

கொதிகலனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு குழாய் வெடித்ததால், லட்சுமண மூர்த்தி (60) உள்ளிட்ட இருவர் மீதும் கொதிக்கும் நீர் கொட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த மூர்த்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர், தொழிலாளர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் விரைந்துச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒரு குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்து, தொழிற்சாலையின் பொது மேலாளர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT