இந்தியா

கர்நாடகத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு

6th Aug 2020 11:30 AM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் பெய்த கனமழையால் சிக்மகளூர் மாவட்டம் முதிகேரே அருகே நிலச்சரிவு ஏற்பட்டதாகத் துணை ஆணையர் தெரிவித்தார்.

கன மழை காரணமாக முதிகேரே அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், உடுப்பி மற்றும் கொடகு மாவட்டங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தும், வாகனங்கள் தண்ணீரில் மிதந்தும், கொடகு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. 

ADVERTISEMENT

மேலும், ஆகஸ்ட் 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கரையோர கர்நாடகாவிலும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி தெற்கு கர்நாடகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சுட்டுரையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : heavy rains
ADVERTISEMENT
ADVERTISEMENT