இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 19.64 லட்சத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை 40,699 -ஆக உயர்வு

6th Aug 2020 10:15 AM

ADVERTISEMENT

புதுதில்லி: கடந்த 24 மணிநேரத்தில் 56,282  பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,64,537 லட்சத்தை தாண்டியுள்ளது.

இன்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவாக  904 பேர் உயிரிழந்ததால்,உயிரிழப்பு எண்ணிக்கை 40,699-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  5,95,501 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,28,337 பேர் கரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை 2,21,49,351 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் 6,64,949  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

பாதிப்பு:  19,64,537 
பலி: 40,699 
குணமடைந்தோர்: 13,28,337
சிகிச்சை பெற்று வருவோா்: 5,95,501

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT