இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி

6th Aug 2020 05:15 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் பலியானார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம், சாராயு ஆற்றில் நேற்று மாலை 15 பேருடன் படகு ஒன்று டியோரியா நோக்கி புறப்பட்டது. மவு எனும் இடத்தில் அந்தப் படகு திடீரென கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். 

மற்ற படகுகளில் பயணித்த மக்கள் ஆற்றில் குதித்து 9 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். காணாமல் போன இளம்பெண்ணை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிக நீரோட்டம் காரணமாக படகு விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

இதனிடையே படகு விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்கி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.  
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT