இந்தியா

ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா?

6th Aug 2020 05:36 PM

ADVERTISEMENT

 

அயோத்யா: அயோத்தியில் புதனன்று நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் புதனன்று ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார், அவருடன் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு முடிந்த பின் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

மகாபிர் என்னும் அந்த நபரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பிரசாதத்துடன் ‘ராம் சரித மானஸ்’ என்னும் ராமர் வரலாறு நூலும், துளசி மாலையும் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட பின்னர்தான் ஏனையோருக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்குதான் முன்னர் ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது என்பதும், அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த மாநில முதல்வர் ஆதித்யநாத் அப்போது அவரது வீட்டில் உணவு சாப்பிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT