இந்தியா

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,092 பேருக்குத் தொற்று, 13 பேர் பலி 

6th Aug 2020 11:47 AM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் புதன்கிழமை இரவு வரை புதிதாக 2,092 பேருக்கு கரோனா தொற்று  பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

அந்த மாநிலத்தில் நாளொன்றுக்கு புதிதாக இரண்டாயிரம் பேருக்குத் தொற்று பதிவாகி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,092 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 73,500 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 13 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 589 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

நேற்று ஒரே நாளில் 21,346 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 1,550 பேரின் முடிவுக்காக காத்திருக்கின்றன. இதுவரை தெலங்கானாவில் 5,43,489 கரோனா வைரஸ் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், 1,289 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், மீட்பு விகிதம் 71.3 ஆக உள்ளது. இந்தியாவில் மீட்பு விகிதம் 67.19  ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT