இந்தியா

ஜார்க்கண்டில் மேலும் 1060 பேருக்கு கரோனா பாதிப்பு

6th Aug 2020 02:39 PM

ADVERTISEMENT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 1060 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா தொற்றால் 143 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது 9 ஆயிரத்து 74 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரோனா தொற்றிலிருந்து 5 ஆயிரத்து 914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

Tags : Corona virus
ADVERTISEMENT
ADVERTISEMENT