இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 6,805 பேருக்கு கரோனா தொற்று

6th Aug 2020 06:02 PM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் புதிதாக 6,805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அந்த மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை 5 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை புதிதாக 6,805 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 2,544 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,58,254 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 93 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 2,897 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 5,602 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 80,281 பேர் குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இன்றைய தேதியில் கர்நாடகத்தில் 75,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 671 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Tags : Corona virus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT